

நியூ ஜெர்ஸி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் 2-வது வேகமான கோலையடித்த வீரர் என்ற சாதனையை ஜெர்மனி லெராய் சேன் செய்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் இ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனி, ஈக்வடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்தது.
இந்தப் போட்டியின்போது ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் லெராய் சேன் கோலடித்தார். அதாவது சரியாக 1.49-வது நிமிடத்தில் இந்த கோலை அவர் அடித்தார்.
இது உலகக் கோப்பை போட்டியில் அடிக்கப்பட்ட 2-வது வேகமான கோலாகும். இதற்கு முன்பு 1934-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது முதல் நிமிடத்திலேயே கோல் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.