கூடு​தல் நேரத்​தில் 2 கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்​தி​யது அர்ஜெண்டினா | FIFA WC 2026

கூடு​தல் நேரத்​தில் 2 கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்​தி​யது அர்ஜெண்டினா | FIFA WC 2026
Updated on
2 min read

கன்​ஹாஸ் சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்டியின் கால் இறு​திச் சுற்​றில் அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கோல் கணக்​கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்னேறியது.

இந்த ஆட்​டம் நேற்று காலை நடை​பெற்​றது. ஆட்​டம் தொடங்​கிய 10-வது நிமிடத்​திலேயே அர்ஜெண்டினா வீரர் அலெக்​சிஸ் மேக் அலிஸ்​டர் ஒரு கோலடித்து கோல் கணக்​கைத் தொடங்​கி ​வைத்தார். நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்​ஸி, கார்​னரிலிருந்து உதைத்த பந்தை தலை​யால் முட்டி அற்​புத​மான கோலாக்​கி​னார் மேக் அலிஸ்​டர். இதனால் 1-0 என்ற கணக்​கில் அர்ஜெண்டினா முன்​னிலை பெற்​றது.

ஆட்​டத்​தின் 44-வது நிமிடத்​தில் சுவிட்​சர்​லாந்து வீரர் பிரீல் எம்​போலா, எதிரணி வீரரை இடறி விட்​ட​தால் மஞ்​சள் அட்டை காண்பித்து எச்​சரிக்​கப்​பட்​டார். முதல் பாதி வரை 1-0 என்ற நிலையே நீடித்​தது. ஆனால் ஆட்​டத்​தின் 67-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டி​னா​வுக்கு அதிர்ச்சி வைத்​தி​யம் அளித்​தது சுவிட்சர்லாந்து. சுவிட்​சர்​லாந்து வீரர் ரிகார்டோ ரோட்​ரிக்ஸ் கடத்​திக் கொண்டு வந்த பந்​தை, கோல் வலைக்​குள் திணித்​தார் டான் டோயே. இதனால் 1-1 என்ற கணக்​கில் சமநிலை ஏற்​பட்​டது.

72-வது நிமிடத்​தின்​போது சுவிட்​சர்​லாந்து வீரர் பிரீல் எம்​போலா மீண்​டும் தவறு செய்ய, நடு​வர் அவருக்கு சிவப்பு அட்டை காண்​பித்​தார். இதனால் சுவிட்​சர்​லாந்து அணி 10 வீரர்​களு​டன் விளை​யாட வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத் தள்​ளப்​பட்​டது. ஆட்​டத்​தின் இறுதி வரை அர்​ஜெண்​டினா வீரர்​களின் கோலடிக்​கும் முயற்​சிக்கு முட்​டுக்​கட்டை போட்​டார் சுவிட்​சர்​லாந்து கோல்​கீப்​பர்.

90 நிமிடங்​கள், காயத்​துக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட நிமிடங்​கள் முடிந்​த​போதும் இரு அணி​களும் 1-1 என்ற கணக்​கிலேயே சமநிலை​யில் இருந்​தன. இதையடுத்து கூடு​தல் நேரம் தரப்​பட்​டது. இந்​தக் கூடு​தல் நேரத்​தின்​போது 2 கோல்​களை அசத்​தலாக அடித்து வெற்​றியைச் சுவைத்​தது அர்​ஜெண்​டினா அணி.

ஆட்​டத்​தின் 112-வது நிமிடத்​தின்​போது அர்​ஜெண்​டினா வீரர் ஜோஸ் மேனுவல் லோபஸ் கடத்​தித் தந்த பந்​தை, பாக்​ஸுக்கு வெளியே இருந்து வேக​மாக உதைத்​தார் ஜூலியன் லோபஸ். இந்த பந்​து, அதிவேக​மாக கோல் வலை​யின் இடதுபுறத்தை துளைத்​தது. இதையடுத்து 2-1 என்ற கணக்​கில் அர்​ஜெண்​டினா முன்​னிலை பெற்​றது.

அதற்​கடுத்த 8-வது நிமிடத்​திலேயே மேலும் ஒரு கோலை அடித்​தது அர்​ஜெண்​டி​னா. அந்​த அணி​யின்​ லவ்​டே​ரா மார்ட்​டினெஸ்​ இந்​த அழகான கோலை அடித்​தார்​. இறு​தி வரை சுவிட்​சர்​லாந்​து வீரர்​கள்​ போ​ராடி​யும்​ கோலடிக்​க முடிய​வில்​லை. இதையடுத்​து 3-1 என்​ற கணக்​கில்​ அர்​ஜெண்​டி​னா வெற்​றி பெற்​று அரை இறுதிக்​கு முன்​னேறியது.

நடுவருடன் மெஸ்ஸி வாக்குவாதம்

சுவிட்சர்லாந்துடனான கால் இறுதிப் போட்டியின்போது போர்ச்சுகலைச் சேர்ந்த நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோல் வளையத்தை நோக்கி மெஸ்ஸி வேகமாக அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் தடுத்துவிட்டார். இதனால் மெஸ்ஸி விரக்தியில் இருந்தார். அப்போது களத்திலிருந்த நடுவர் பெட்ரோவுடன், மெஸ்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தடுப்பாட்ட அரண் கோட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த மெஸ்ஸியை, பின்னால் செல்லுமாறு நடுவர் கூறியதால் மெஸ்ஸி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது மெஸ்ஸி போர்ச்சுகல் நடுவரிடம், "என்னிடம் ஒழுங்காக பேசுங்கள். என்னை அவமதிக்காதீர்கள். நான் உங்களிடம் ஒழுங்காகத்தான் பேசினேன்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோலடிக்​காத மெஸ்ஸி

சுவிட்​சர்​லாந்​துட​னான நேற்​றைய கால் இறுதி ஆட்​டத்​தில் அர்​ஜெண்​டினா கேப்​டன் லயோனஸ் மெஸ்ஸி கோலடிக்​க​வில்​லை. இதன் மூலம் தொடர்ச்​சி​யாக உலக கோப்பை போட்​டிகளில் கோல் அடித்து வந்த அவரது சாதனை முடிவுக்கு வந்​துள்​ளது. உலக கோப்பை போட்​டிகளில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் மெஸ்ஸி கோல் அடிந்திருந்தார்.

நடப்பு உலக கோப்​பை​யில் மெஸ்ஸி 8 கோல்​கள் அடித்​து, பிரான்ஸ் வீரர் கிலியன் எம்​பாப்​வே​யுடன் இணைந்து முதலிடத்​தில் இருக்​கிறார். எனவே, இவர்​களில் யார் கோல்​டன் பூட்டை கைப்​பற்​று​வார் என்​ப​தில் கடும் போட்டி நில​வு​கிறது. அதிக கோலடிக்​கும் வீரருக்​குத்​தான் கோல்​டன் பூட் விருது கிடைக்​கும்.

கூடு​தல் நேரத்​தில் 2 கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்​தி​யது அர்ஜெண்டினா | FIFA WC 2026
எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஈரானின் 140 இடங்கள் மீது தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in