இலங்கை - இந்தியா டெஸ்ட் தொடரை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

இலங்கை - இந்தியா டெஸ்ட் தொடரை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்
Updated on
1 min read

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலே நகரில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 23-ம் தேதி கொழும்பு நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த இரு போட்டிகளையும் ரசிகர்கள் மைதானத்தில் இலவசமாக கண்டுகளிக்கலாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காணவரும் ரசிர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இலங்கை - இந்தியா டெஸ்ட் தொடரை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர்: அரை இறுதியில் அஷ்மிதா, ரக்‌ஷிதா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in