

அஷ்மிதா சாலிஹா
அசான்: கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் உள்ளள அசான் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள அஷ்மிதா சாலிஹா, 22-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா அகேச்சியுடன் மோதினார். இதில் அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் சகநாட்டைச் சேர்ந்த தன்வி சர்மாவை எதிர்த்து விளையாடினார். இதில் ரக்ஷிதா ராம்ராஜ் 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால் பதித்தார்.