

இங்கிலாந்து அணி வீரர்கள்
புதுடெல்லி: வாடகை விமானம் மூலம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய கிரிக்கெட் அணிகள் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்லவுள்ளன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அரை இறுதிச் சுற்று முடிந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. போட்டியிலிருந்து வெளியேறிய தென் ஆப் பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவிலேயே தங்கியுள்ளன.
அந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து விமானங்கள் இயக்கப்படாத நிலையில் அணி வீரர்கள் ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த அணிகள் வாடகை விமானங்கள் மூலம் சொந்த நாடுகளுக்குச் செல்ல ஐசிசி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் கொல்கத்தாவிலிருந்து வாடகை விமானம் மூலம் செல்லவுள்ளன. முதலில் ஜோஹன்
னஸ்பர்க் செல்லும் விமானம் அங்கு தென் ஆப்பிரிக்க வீரர்களை இறக்கி விடவுள்ளது. பின்னர் அந்த விமானம் மேற்கு இந்தியத் தீவு வீரர்களுடன் ஆன்டிகுவாவுக்குச் செல்லவுள்ளது.
அதேநேரத்தில் மும்பையிலிருந்து இங்கிலாந்து அணி வாடகை விமானம் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்தன.