2-வது டி20 ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து - IND vs ENG

2-வது டி20 ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து - IND vs ENG
Updated on
2 min read

மான்செஸ்டர்: இந்​தியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று மான்​செஸ்​டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை 4 விக்கெட்டுகளில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நேற்று மான்செஸ்டர் நகரில் இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்றது. இதை டாஸ் வென்ற இந்​திய அணி பேட்டிங்கை தேர்வு செய்​தது. இந்​திய அணி​யில் 15 வயதாகும் வைபவ் சூர்​ய​வன்ஷி அறி​முக வீர​ராக களமிறங்​கி​னார். இதன் மூலம் சர்​வ​தேச கிரிக்​கெட் அரங்​கில் இந்​திய அணிக்​காக இளம் வயதில் (15 வயது 99 நாட்​கள்) களமிறங்​கிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்​ய​வன்ஷி படைத்​தார்.

சூர்​ய​வன்ஷி களமிறக்​கப்​பட்​ட​தால் சஞ்சு சாம்​சன் நீக்கப்பட்டிருந்தார். முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்களில் 7 விக்​கெட்​டுகள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது. மிகவும் எதிர்​பார்க்​கப்​பட்ட சூர்​ய​வன்ஷி 10 பந்​துகளில், 2 சிக்ஸர்களு​டன் 14 ரன்​கள் எடுத்த நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார். மற்​றொரு தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 24 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் விளாசிய நிலை​யில் சேம் கரண் பந்​தில் வெளி​யேறி​னார்.

இதையடுத்து களமிறங்​கிய இஷான் கிஷன் 40 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 49 ரன்​களும், கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 22 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர். ஷிவம் துபே 5, அக்​சர் படேல் 2 ரன்​களில் நடையை கட்​டினர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் அதிரடி​யாக விளையாடிய திலக் வர்மா 11 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 24 ரன்​களும், ஹர்​ஷித் ராணா 3 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 6 ரன்​களும் விளாசினர்.

இங்​கிலாந்து அணி தரப்​பில் சேம் கரண் 3 விக்​கெட்​களை வீழ்த்தினார். வில் ஜேக்​ஸ், ஜோப்ரா ஆர்ச்​சர், லியாம் டாவ்​சன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். இதையடுத்து 191 ரன்​கள் இலக்​குடன் இங்​கிலாந்து அணி பேட் செய்​ய ஆயத்தமானது.

அந்த அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் பிலிப் சால்ட் மாற்றியும் பட்லர் என இருவரும் ரன் எடுக்காமல் வெளியேறினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இணைந்து 23 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். புரூக் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டாம் பேன்டன் உடன் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பெத்தேல். 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து டாம் பேன்டன் ஆட்டமிழந்தார். வில் ஜேக்ஸ் (9), சேம் கரண் (7) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் பெத்தேல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 76 ரன்களை அவர் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சின் 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்ஷித் ராணா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா பந்து வீசிய போது 17-வது ஓவரில் 29 ரன்களை கொடுத்திருந்தார் ரவி பிஷ்னோய். இந்த தொடரில் அடுத்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. கேப்டன் ஸ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி இன்னும் டி20 ஆட்டத்தில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதுவரை 4 ஆட்டங்களை இந்தியா விளையாடி உள்ளது. அதில் 3 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது இந்தியா.

2-வது டி20 ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து - IND vs ENG
கேப் வெர்டேவை போராடி வீழ்த்தியது அர்ஜெண்டினா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in