கேப் வெர்டேவை போராடி வீழ்த்தியது அர்ஜெண்டினா | FIFA WC 2026

கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி
கேப் வெர்டேவை போராடி வீழ்த்தியது அர்ஜெண்டினா | FIFA WC 2026
Updated on
2 min read

மியாமி கார்டன்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்ந்து தொடரின் நாக் அவுட் சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் மியாமி கார்​டனில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டி​னா, கேப் வெர்டே அணியை எதிர்த்து விளை​யாடியது.

29-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டினா அணி​யின் வீரர் லிசாண்ட்ரோ மார்​டினெஸ் பெனால்டி பாக்ஸை நோக்கி துல்​லிய​மான லாங்​-​பாஸை அடித்​தார். இதை கேப் வெர்​டே​வின் தற்​காப்பு அரணுக்கு பின்​னால் மறைந்​த​படி சரி​யான நேரத்​தில் ஓடிவந்து பந்தை தன்​வசப்​படுத்​திய லயோனல் மெஸ்ஸி கோல்​கீப்​பர் வோசின்​ஹாவை கடந்து லாவக​மாகக் கோல் வலைக்​குள் செலுத்​தி​னார். இதனால் அர்​ஜெண்​டினா 1-0 என முன்​னிலை பெற்​றது.

2-வது பாதி ஆட்​டத்​தில் கேப் வெர்டே பதிலடி கொடுத்​தது. வலது பக்​க​வாட்​டில் கிடைத்த இடைவெளியைப் பயன்​படுத்தி கேப் வெர்டே அணி​யின் வீரர் மொரை​ரா, கேப்​டன் மென்​டிஸை நோக்​கிப் பந்தை நகர்த்​தி​னார். மென்​டிஸ் பெனால்டி ஏரி​யா​வுக்​குள் இருந்த டெராய் டூர்​டேவுக்கு பந்தை கடத்​தி​னார்.

மிட்​பீல்​ட​ரான டூர்​டேவுக்கு கோல் அடிப்​ப​தற்​கான ஆங்​கிள் கடின​மாகவே இருந்​தது. ஆனாலும், லிசாண்ட்ரோ மார்​டினெஸ் மற்​றும் கோல்​கீப்​பர் எமிலி​யானோ மார்​டினெஸ் ஆகிய இரு​வரை​யும் ஏமாற்​றி, பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார் டெராய் டூர்​டே. இதனால் ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 8நிமிடங்​களி​லும் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதையடுத்து கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் 92-வது நிமிடத்​தில் லயோனல் மெஸ்ஸி அடித்த கார்​னர் கிக்கை அலிஸ்​டர் தலை​யால் முட்டி கோல் அடிக்க முயன்​றார். ஆனால் பந்து அவர் மீது பட்டு வில​கிச் சென்​றது. அப்​போது அங்கே நின்ற லிசாண்ட்ரோ மார்​டினெஸ் சாதுர்​ய​மாக செயல்​பட்டு பந்தை கோல் வலை​யின் டாப் கார்​னரில் திணித்​தார். இதனால் அர்​ஜெண்​டினா 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

103-வது நிமிடத்​தில் கேப் வெர்டே அணி மீண்​டும் பதிலடி கொடுத்​தது. இடதுபுறத்​தில் இருந்து பந்​தைக் கடத்​திக்​கொண்டு உள்ளே நுழைந்த சிட்னி கப்​ராக் தனது உடலை லாவக​மாகத் திருப்பி அடித்த ‘கர்​லிங் ஷாட்’ கோல் வலை​யின் டாப் கார்​னருக்​குள் சீறிப் பாய்ந்​தது. இதனால் ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது.

111-வது நிமிடத்​தில் இடது பக்​கத்​திலிருந்து மெஸ்ஸி அடித்த கார்​னர் கிக்கை பாக்ஸ் பகு​திக்​குள் துள்​ளிய​வாறு கிறிஸ்​டியன் ரொமேரோ தலை​யால் முட்டி கோல் வலைக்​குள் தள்ள முயன்​றார். அப்​போது பந்து கேப் வெர்டே அணி​யின் வீரர் டினி போர்​ஜஸின் கையில் பட்டு கோல் கீப்​பர் வோசின்​ஹாவை ஏமாற்றி சுய கோலாக மாறியது. இது கேப் வெர்டே ரசிகர்​களின் இதயங்களை நொறுக்​கியது.

இந்த கோலால் அர்​ஜெண்​டினா 3-2 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது. இதன் பின்​னர் கேப் வெர்டே அணி போராடிய போதி​லும் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் அர்​ஜெண்​டினா 3-2 என்​ற

கோல்​ கணக்​கில்​ வெற்​றி பெற்​று ரவுண்​ட்​ ஆஃப்​ 16 சுற்​றுக்​கு முன்​னேறியது. இந்​த சுற்​றில்​ அர்​ஜெண்​டி​னா வரும்​ 7-ம்​ தேதி எகிப்​து அணி​யுடன்​ மோதுகிறது.

இரும்பு கோட்​டை​யான வோசின்ஹா

அர்​ஜெண்​டி​னா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அந்த அணி​யின் கோல் முடிக்​கும் முயற்​சிகளை 10 முறை தகர்த்​தெறிந்​தார் கேப் வெர்​டே​வின் கோல்​கீப்​பர் வோசின்​ஹா. அதி​லும் உலகத்​தரம் வாய்ந்த வீர​ரான லயோனல் மெஸ்ஸி அடித்த 5 அபாயகர​மான கோல் முயற்​சிகளை 40 வயதாகும் வோசின்ஹா தனி​யாகத் தடுத்து நிறுத்தி அசைக்க முடி​யாத இரும்​புச் சுவ​ராக நின்​றார்.

கோல் வேட்​டை​யில் மெஸ்ஸி

அர்​ஜெண்​டி​னா​வின் கேப்​ட​னான லயோனல் மெஸ்​ஸி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது​வரை 7 கோல்​களை அடித்​துள்​ளார். இதன் மூலம், இந்த ஆண்டு உலகக் கோப்​பை​யின் அதிக கோல்​கள் அடித்​தவர்​களுக்​கான ‘கோல்​டன் பூட்’ பந்​த​யத்​தில் பிரான்ஸ் நாட்​டின் கிலியன் எம்​பாப்​பேவை விட ஒரு கோல் முன்​னிலை பெற்று முதலிடத்​தில் உள்​ளார். மேலும், தனது உலகக் கோப்பை வரலாற்​றுச் சாதனையை நீட்​டித்​துள்ள மெஸ்​ஸி, ஒட்​டுமொத்த உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக கோல்​கள் அடித்​தவர்​கள் பட்​டியலில் 20 கோல்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். எம்​பாப்பே 18 கோல்​கள் அடித்து 2-வது இடத்​தில் உள்​ளார். உலகக் கோப்பை தொடர்​களில் மெஸ்ஸி தொடர்ச்​சி​யாக 8 ஆட்​டங்​களில் 12 கோல்​களை அடித்து அசத்தி உள்​ளார்.

ரசிகர்​களின் இதயங்​களை வென்ற கேப் வெர்டே

நடப்பு உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டி​னா​வுக்கு எதி​ராக தோல்வி அடைந்த போதி​லும் ஆப்​பிரிக்​கா​வின் மேற்கு கடற்​கரை​யில் அமைந்​துள்ள 5.25 லட்​சம் மக்​கள் தொகையை கொண்ட சிறிய தீவு நாடான கேப் வெர்டே அசாத்​தி​ய​மான திறனை வெளிப்​படுத்​தி​யது. ஒரு முறை அல்ல, இரு முறை அந்த அணி ஆட்​டத்தை சமநிலைக்கு கொண்டு வந்​தது.பெரிய நட்​சத்​திர வீரர்​களோ, உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்போ இல்​லாத நிலை​யிலும் கேப் வெர்டே அணி, அர்​ஜெண்​டி​னாவை மிரள வைத்த விதம் கால்​பந்து உலகம் உள்​ளவரை பேசப்​படும்.

களத்​தில் கேப் வெர்டே அணி​யின் வீரர்​கள் காட்​டிய அந்த அசாத்​திய துணிச்​சல், தோல்​வியைத் தழு​வி​னாலும் ஒட்​டுமொத்த கால்​பந்​து ரசிகர்​களின்​ இதயங்​களை​யும்​ வென்​று, தங்​களை வரலாற்றில்​ அழி​யாத நாயகர்​களாக ​மாற்​றி​யிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in