இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: இலங்கைக்கு எதிராக 55 ரன்களில் வெற்றி

இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: இலங்கைக்கு எதிராக 55 ரன்களில் வெற்றி
Updated on: 
1 min read

லாகூர்: பாகிஸ்தானில் நடை​பெற்று வரும் முத்​தரப்பு ஒருநாள் கிரிக்​கெட் போட்டித் தொடரில் நேற்று நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 386 ரன்​கள் குவித்​தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்​கெட் 132 பந்​துகளில், 24 பவுண்​டரி​களு​டன் 167 ரன்​கள் குவித்த நிலை​யில் இஷான் மலிங்கா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீரரான டாம் பேன்​டன் 75 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​கள் சேர்த்​தார். கேப்​டன் ஹாரி புரூக் 44, ஜோர்​டான் காக்ஸ் 43, வில் ஜேக்ஸ் 30, சாம் கரண் 21 ரன்​கள் சேர்த்​தனர். இதையடுத்து 387 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 45.1 ஓவர்​களில் 331 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பவன் ரத்​னாயகே 118, குஷால் மெண்​டிஸ் 89 ரன்​கள் விளாசினர்.

55 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களில் தோல்வியை சந்​தித்து இறுதிப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​திருந்​தது. நாளை (31-ம் தேதி) நடை​பெறும் இறுதிப் போட்​டி​யில் பாகிஸ்​தான் - இலங்கை அணிகள் மோதுகின்​றன.

இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: இலங்கைக்கு எதிராக 55 ரன்களில் வெற்றி
2027-ல் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை. மாணவர் சங்க தேர்தல்

X