முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து | FIFA WC 2026

முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து | FIFA WC 2026
Updated on
1 min read

சியாட்டில்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சியாட்டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்தில் நேற்று ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் - எகிப்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் எகிப்து அணியின் மஹ்மூத் சபேர் கோல் அடித்து அசத்தினார். இதற்கு அடுத்த 9-வது நிமிடத்தில் ஈரான் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் ராமின் ரேசையான் 14-வது நிமிடத்தில் அடித்த கோல் காரணமாக ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+3-வது நிமிடத்தில் ஈரான் வீரர் ஷோஜா கலீல்சாதே கோல் அடித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஈரான் அணி ஏமாற்றம் அடைந்தது. முடிவில் இந்த போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

லீக் சுற்றின் முடிவில் எகிப்து அணி 2 டிரா, ஒரு வெற்றி என 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் எகிப்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன் முறையாகும். ஈரான் அணி 3 ஆட்டங்களையும் டிரா செய்து 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாக் அவுட் சுற்றை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

லீக் சுற்றின் முடிவில் 3-வது இடத்தை பிடிக்கும் 8 சிறந்த அணிகள் அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும்.

முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து | FIFA WC 2026
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து போட்டி: புனித மரியன்னை, அங்கு விலாஸ் அணிகள் முதலிடம் பிடித்து அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in