டயமண்ட் லீக் தடகளம்: ருமேஷ் தரங்கா வரலாற்றுச் சாதனை

ருமேஷ் தரங்கா

ருமேஷ் தரங்கா

Updated on
1 min read

பிரஸ்ஸல்ஸ்: டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஈட்டி எறிதல் விளையாட்டில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 23 வயதான ருமேஷ் தரங்கா 89.04 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கை தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ருமேஷ் தரங்கா புரிந்தார்.

இதே பிரிவில் போலந்து வீரர் டேவிட் வெகனர் 87.47 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தையும், டிரினாட் அன்ட் டொபாகோ நாட்டின் கேஷர்ன் வால்காட் 83.99 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.

<div class="paragraphs"><p>ருமேஷ் தரங்கா</p></div>
‘எஸ்ஐஆர் மூலம் மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்’ - முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in