CWG 2026: தமிழக வீரர்கள் பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு பதக்கம் வென்று அசத்தல்

பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு திருமாறன்

பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு திருமாறன்

Updated on
1 min read

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்திரவேல் மற்றும் செல்வபிரபு ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் (Triple Jump) பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், பிரவீன் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்தப் போட்டியில் 16.72 மீட்டர் தூரம் தாண்டிய ஜமைக்காவின் ஜோர்டான் ஸ்காட் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியாவும், 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் தங்கப் பதக்கம் வென்றனர். இதன்மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

காமன்வெல்த் போட்டியில் 7 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பதக்கப் பட்டியலில் 132 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 82 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 54 பதக்கங்களுடன் கனடா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

<div class="paragraphs"><p>பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு திருமாறன்</p></div>
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி” - அமைச்சர் நிர்மல்குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in