சிஎஸ்கே சார்பில் 22-ம் தேதி ரசிகர் திருவிழா

சிஎஸ்கே சார்பில் 22-ம் தேதி ரசிகர் திருவிழா
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தானுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் குவாஹாட்​டி​யில் நடை​பெறுகிறது. தொடர்ந்து ஏப்​ரல் 3-ம் தேதி தனது சொந்த மைதான​மான சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி, பஞ்​சாப் கிங்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

இந்​நிலை​யில் சிஎஸ்கே சார்​பில் முதன்​முறை​யாக மெகா ரசிகர்​கள் திரு​விழா நடத்​தப்பட உள்​ளது. இந்த நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி மாலை எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த நிகழ்ச்​சி​யில், சிஎஸ்கே அணிக்​காக வெவ்​வேறு காலக்​கட்​டங்​களில் விளை​யாடிய ‘ஆல்​டைம் கிரேட்’ சூப்​பர் கிங்ஸ் நட்​சத்​திரங்​களான சுரேஷ் ரெய்​னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், பத்​ரி​நாத் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

இவர்​கள் தற்​போதைய சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி​யுடன் இணைந்​து, அதிரடி​யான மற்​றும் இது​வரை கண்​டி​ராத சில சுவாரஸ்​ய​மான விளை​யாட்​டு​களில் பங்​கேற்க உள்​ளனர். புகழ்​பெற்ற ஆஸ்​கார் விருது வென்ற இசை அமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மானின் நேரடி இசை நிகழ்ச்​சி​யும் நடை​பெறவுள்​ளது. இந்த நிகழ்ச்​சிக்​கான டிக்​கெட் விற்​பனை இன்று (15-ம் தேதி) சிஎஸ்கே மற்​றும் டிஸ்ட்​ரிக்ட் இணை​யதளத்​தில்​ தொடங்​கு​கிறது.

சிஎஸ்கே சார்பில் 22-ம் தேதி ரசிகர் திருவிழா
விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் சமையல் காஸ் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in