விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் சமையல் காஸ் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் சமையல் காஸ் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: சமையல் காஸ் விநி​யோகத்​தில் சிக்​கல் நீடித்​தா​லும் தட்​டுப்​பாடு இல்லை என மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

இந்​தியா உலகின் 2-வது பெரிய சமையல் காஸ் (எல்​பிஜி) நுகர்வு செய்​யும் நாடாகும். இதில் 90 சதவீத எரி​வாயு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் போர்ப் பதற்​றம் காரண​மாக, இந்த கடல் வழிப் பாதை​யில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​துள்​ளது.

இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

மேற்கு ஆசி​யப் போர் தீவிரமடைந்து வரும் நிலை​யில், எல்​பிஜி சிலிண்​டர்​களுக்கு தட்​டுப்​பாடு ஏற்​படும் என மக்​கள் மத்​தி​யில் ஒரு​வித தேவையற்ற அச்​சம் நில​வு​கிறது. இதனால் வழக்​கத்​தை​விட கூடு​தலாக 88 லட்​சம் பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இதனால் சமையல் காஸ் விநி​யோகம் கவலைக்​குரிய ஒரு விஷய​மாக உள்​ளது. இருப்​பினும், எந்த விநி​யோக மையத்​தி​லும் இருப்பு தீர்ந்​து​விட​வில்​லை. எனவே, தேவைப்​படும் போது மட்​டும் பொது​மக்​கள் சிலிண்​டர்​களை முன்​ப​திவு செய்ய வேண்​டும்.

எண்​ணெய் நிறு​வனங்​களிடம் கச்சா எண்​ணெய் இருப்பு போது​மான அளவில் உள்​ளது. இதனால் பெட்​ரோல், டீசலுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​ப​டாது.

வர்த்தக சிலிண்​டர் விநி​யோகம் குறித்த முடிவு​கள் அந்​தந்த மாநில அரசுகளு​டன் கலந்​தாலோ​சித்து எடுக்​கப்​படும். சிலிண்​டர்​களைக் கள்​ளச் சந்​தை​யில் விற்​பனை செய்​வதைத் தடுக்​கத் தொடர்ச்​சி​யாக சோதனை​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. மார்ச் 13-ம் தேதி மட்​டும் எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் 1,300-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் திடீர் சோதனை​களை நடத்​தினர்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் சமையல் காஸ் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்
ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in