ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ், துபே அபாரம்: சிஎஸ்கே 209 ரன்கள் குவிப்பு

சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ்

சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ்

Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களான ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே ஆகியோர் அபாரமாக ஆடி ரன் சேர்த்தனர்.

சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பேட் செய்தது. சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து களத்துக்கு வந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து அதிரடியாக ஆடி ரன் சேர்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ், 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக ஆடிய ஆயுஷ் மாத்ரேவும் விக்கெட்டை இழந்தார். 43 பந்துகளில் 73 ரன்களை அவர் சேர்த்திருந்தார். 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

அதற்கடுத்து 5-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த சர்பராஸ் கான் மற்றும் ஷிவம் துபே இணை 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தது. சர்பராஸ், 12 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே. துபே, 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரஷாந்த் வீர் 6 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 210 ரன்கள் தேவைப்படுகிறது.

<div class="paragraphs"><p>சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ்</p></div>
“கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்ததாக எல்லை மீறி பேசுகிறார் பழனிசாமி” - நெல்லையில் ஸ்டாலின் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in