

கோப்புப்படம்
சென்னை: சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் சார்பில் 6 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை (2-ம் தேதி) செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த முகாம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது 10 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும். முகாமில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம்.