பொறி​யியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

பொறி​யியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்​னையை அடுத்த கவரைப்​பேட்​டை​யில் உள்ள ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறி​யியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்​கியது.

ஆர்​எம்கே குழும நிறு​வனங்​களின் இயக்​குநர்​ ஜோதி நாயுடு, கல்​லூரி​யின் முதல்​வர் முகமது ஜுனைத் ஆகியோர் போட்​டியை தொடங்கி வைத்​தனர். முதல் ஆட்டத்​தில் ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி, சவீதா பொறி​யியல் கல்​லூரி​யுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த ஆர்​எம்கே அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்புக்கு 116 ரன்​கள் எடுத்​தது.

சஞ்​சய் 31, யோகேஷ்வரன் 27 ரன்​கள் சேர்த்​தனர். சவீதா அணி தரப்​பில் விக்​னேஷ் 4, ராகுல் 2 விக்​கெட்​களை வீழ்த்தினர். 117 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த சவீதா அணி 19.3 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 117 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அதி​கபட்​ச​மாக ராகுல் 37, அபிஷேக் 16 ரன்​கள் சேர்த்​தனர்.

மற்ற ஆட்​டங்​களில் ஆர்​எம்டி பொறி​யியல் கல்​லூரி அணியை 8 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் எஸ்​விசி பொறி​யியல் கல்​லூரி அணி​யும், கிண்டி சிப்​பெட் அணியை 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வேலம்​மாள் பொறி​யியல் கல்​லூரி அணியும் தோற்​கடித்​தன.

அம்​ரிதா பல்​கலைக்​கழக அணி 8 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் பனிமலர் பொறியியல் கல்லூரி அணியிடம் தோல்வி அடைந்தது.பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை ஆர்எம்கே குழும நிறுவனங்களின் இயக்குநர் ஜோதி நாயுடு தொடங்கி வைத்தார்.

பொறி​யியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்
வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்குவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in