புதுடெல்லி: 8-வது காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு அக்டோர் 29 முதல் நவம்பர் 4 வரை மால்டா மற்றும் கோஸோவில் நடைபெற உள்ளது. 29-ம் தேதி தொடக்க விழா நடைபெறுகிறது. இதன் பின்னர் 30 முதல் 4-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீச்சல், பாரா நீச்சல், தடகளம், பாரா தடகளம், நெட்பால், பாய்மரப்படகு, ஸ்குவாஷ், டிரையத்லான், வாட்டர் போலோ, பளுதூக்குதல் ஆகிய 8 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறும். இம்முறை பாய்மரப்படகு, வாட்டர் போலோ ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.