ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - முகமேதன் இன்று பலப்பரீட்சை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - முகமேதன் ஸ்போர்டிங் கிளப் அணிகள் மோதுகின்றன. சென்னையின் எஃப்சி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

முகமேதன் ஸ்போர்டிங் கிளப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அந்த அணி ஒரு ஆட்டத்தை டிரா செய்த நிலையில் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தது. சென்னையின் எஃப்சி அணி கடைசியாக டெல்லி ஸ்போர்டிங் கிளப் அணியை தோற்கடித்து இருந்தது.

இதுவரை சென்னையின் எஃப்சி, முகமேதன் ஸ்போர்டிங் கிளப் அணிகள் 2 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் முகமேதன் அணி வெற்றி பெற்றிருந்தது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது. நடப்பு சீசனில் முகமேதன் அணி சிறந்த பார்மில் இல்லை. இதனால் சென்னையின் எஃப்சி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெறுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
மத்திய அரசின் கவுன்ட்-டவுன் தொடங்கியது: சென்னையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in