மத்திய அரசின் கவுன்ட்-டவுன் தொடங்கியது: சென்னையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலும் முதல்​வருடன் சென்று வாக்கு சேகரித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை​யுடன் முடிவடைகிறது. இதனால், அனைத்​துக் கட்​சி​யினரும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தமிழகம் முழு​வதும் 6 கட்​டங்​களாக பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். நேற்று முன்​தினம் இரவு சென்னை திரும்​பிய முதல்​வர், சென்​னை​யில் மயி​லாப்​பூர், ஆயிரம்​விளக்​கு, தியாக​ராய நகர் தொகு​தி​களில் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார்.

நேற்று காலை சென்னை அண்ணா நகர், மதுர​வாயல், விரும்​பாக்​கம் ஆகிய தொகு​தி​களில் திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக வாக்கு சேகரித்​தார். பூங்​காக்​கள், மார்க்​கெட் பகு​தி​களில் நடந்து சென்​று, பொது​மக்​களிடம் ஆதரவு கோரி​னார்.

நேற்று மாலை திருவிக நகர் தொகுதி திமுக வேட்​பாளரை ஆதரித்து புளியந்​தோப்பு காவல் நிலை​யம் அருகே பிரச்​சா​ரத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​னார். அவருடன் ஆம் ஆத்மி கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாள​ரும், டெல்லி முன்​னாள் முதல்​வரு​மான அர்​விந்த் கேஜ்ரி​வாலும் இணைந்து பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

பிரச்​சா​ரத்​தின்​போது முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: டெல்​லி​யில் 2 முறை முதல்​வ​ராக இருந்த அர்​விந்த் கேஜ்ரி​வால் நமது அழைப்பை ஏற்று பிரச்​சா​ரத்​துக்​காக தமிழகம் வந்​துள்​ளார். அவர் பாஜக​வுக்கு ஜென்ம விரோ​தி​யாக இருப்​பவர். எந்த மிரட்​டலுக்​கும், அச்​சுறுத்​தலுக்​கும் அஞ்​சாதவர். அவர் மீது அபாண்​ட​மான வகை​யில் ஊழல் குற்​றச்​சாட்டை சுமத்​தினர்.

அவரை கைது செய்து சிறை​யில் அடைத்​து, மன்​னிப்பு கேட்க வேண்​டும் என்று அவரை வலி​யுறுத்​தினர். உயிரே போனாலும் மன்​னிப்பு கேட்க மாட்​டேன் என்று போராடிய​வர் கேஜ்ரி​வால். உச்ச நீதி​மன்​றம் வரை சென்று போராடி, தன் மீது போடப்​பட்ட வழக்​கு​கள் அனைத்​தை​யும் பொய் என்று நிரூபித்து விடு​தலை​யாகி வெளியே வந்​துள்​ளார்.

அவர் உங்​களைத் தேடி வந்து திமுக​வுக்கு ஆதரவு கேட்​கிறார். அந்த அளவுக்கு அவருக்​கும், நமக்​கும் தொடர்பு இருக்​கிறது. அது​மட்​டுமின்​றி, தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​களில் உள்ள மாதிரிப் பள்​ளி​களை திறக்க உந்​துதலாக இருந்​தவர் கேஜ்ரி​வால். மீண்​டும் தமிழகத்​தில் நம் ஆட்சி அமைந்​ததும், 1,000 ஸ்மார்ட் பள்​ளி​களைத் திறப்​போம். இவ்​வாறு அவர்​ பேசினார்.

பின்​னர், எழும்​பூர், துறை​முகம், ராயபுரம் பெரம்​பூர், ஆர்​.கே.நகர் தொகு​தி​களில் முதல்​வர் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவருக்கு திமுக​வினர் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பெரம்​பூரில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: நான் யாரை​யும் தாக்​கியோ, விமர்​சித்​தோ, தரக்​குறை​வாகவோ பேச விரும்​ப​வில்​லை. அந்த பழக்​க​மும் எனக்கு கிடை​யாது. கடந்த முறை திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​யில் 90 சதவீத பணி​களை முடித்​து​ விட்​டோம். மீதம் 10 சதவீத பணி​கள் உள்​ளன. மத்​திய அரசு போதிய நிதியை விடுவிக்​காதது​தான் அதற்கு காரணம். மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி ஆட்​சிக்கு வந்​து, நாடாளு​மன்​றத்​தில் தோல்​வியை சந்​தித்த முதல் மசோ​தா, தொகுதி மறு​வரையறை மசோ​தா​தான். மத்​திய அரசுக்கு கவுன்ட்​-ட​வுன் தொடங்​கி​விட்​டது.

விஜய் குறித்து விமர்சனம்: சென்னை மாநக​ராட்​சி​யில் மக்​களால் தேர்வு செய்​யப்​பட்ட முதல் மேயர் நான்​தான். நான் மேய​ராக இருந்​த​போது, பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி உள்​ளேன். உங்​களு​டன் இருந்​து, உங்​களுக்​காக பணி​யாற்​றும், உங்​கள் வீட்​டுப் பிள்​ளை​யாக இருந்து பணி​யாற்​றும் ஒரு​வர் வேண்​டு​மா? அல்​லது எங்​கிருந்தோ புதி​தாக அரசி​யலுக்கு வந்​து, நாடகம் நடித்​துக் கொண்​டிருப்​பவர் வேண்​டு​மா? சிந்​தித்​துப் பாருங்​கள். கூப்​பிட்ட குரலுக்கு ஓடிவரக்​கூடிய எம்​எல்​ஏ​வைத்​தான் நீங்​கள் தேர்வு செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

வில்​லி​வாக்​கம் மற்​றும் தனது தொகு​தி​யான கொளத்​தூரில் நிறைவு நாளான இன்று முதல்​வர் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பெர​வள்​ளூர் சதுக்​கத்​தில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் தனது பிரச்​சா​ரத்தை ஸ்டா​லின் நிறைவு செய்​கிறார். கடந்த 3 நாட்​களாக முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​ சென்​னை​யில்​ தொடர்ந்​து தீவிர​மாக பிரச்​சாரம்​ மேற்​கொண்​டு வருவது குறிப்​பிடத்​தக்​கது.

அதிமுக மிகப் பெரிய துரோகம்: அர்​விந்த் கேஜ்ரி​வால் குற்றச்சாட்டு

சென்னையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, காலை உணவு என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டங்கள் கிடையாது. இதனால்தான் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன்.

என்டிஏ என்பது புதிய டெல்லி கூட்டணியை (New Delhi Alliance) குறிக்கிறது. அது பாஜகவும், அதிமுகவும் சேர்ந்த கூட்டணி அல்ல. அதிமுகவை பாஜக முழுமையாக கைப்பற்றிவிட்டது. பாஜகவை தமிழத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம், உங்களுக்கு அதிமுக மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. எனவே, அவர்களுக்கு வாக்களிக்கும் முன்பு எச்சரிக்கையாக இருங்கள். ஓராண்டுக்கு முன்பு டெல்லி மக்கள் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தார்கள். இப்போது நாங்கள் டெல்லியில் செய்த அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக நிறுத்திவிட்டது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.</p></div>
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in