ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுக்கு குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வு

ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுக்கு குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வு
Updated on
1 min read

பாட்டியாலா: காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்றன. இதில் மகளிர் பிரிவில் 51 கிலோ எடைப் பிரிவில் சாக் ஷி சவுத்ரி, 54 கிலோ எடைப் பிரிவில் பிரீத்தி பவார், 60 கிலோ எடைப் பிரிவில் பிரியா கங்காஸ், 65 கிலோ எடைப் பிரிவில் பர்வீன் ஹூடா, 75 கிலோ எடைப் பிரிவில் லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வானார்கள்.

57 கிலோ எடைப் பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா, 70 கிலோ எடைப் பிரிவில் அருந்ததி சவுத்ரி ஆகியோர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஆடவர் பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில் ஜடுமணி சிங், 60 கிலோ எடைப் பிரிவில் சச்சின் ஷிவாச், 70 கிலோ எடைப் பிரிவில் சுமித் குண்டு, 80 கிலோ எடைப் பிரிவில் அங்குஷ், 90 கிலோ எடைப் பிரிவில் கபில் போகாரியா, 90+ கிலோ எடைப் பிரிவில் நரேந்தர் பெர்வால் ஆகியோர் தங்களது இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வானார்கள். 65 கிலோ எடைப் பிரிவில் ஆதித்யா பிரதாப் சிங் காமன் வெல்த் விளையாட்டு போட்டிக்கு தேர்வானார்.

ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுக்கு குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வு
நாம் கடின காலத்துக்கு தயாராக வேண்டுமா? - எரிபொருள் விலை உயர்வும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in