பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை
Updated on
1 min read

மிர்​பூர்: வங்கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 413 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 46 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்புக்கு 179 ரன்​கள் எடுத்​தது. அசான் அவைஸ் 85, அப்​துல்லா பாஸல் 37 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்​களில் 386 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது. சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்து வெளி​யேறி​னார். அப்​துல்லா பாஸல் 60, கேப்​டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்​மான் ஆகா 58, முகமது ரிஸ்​வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்தனர்.

வங்​கதேச அணி தரப்​பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களை வீழ்த்​தி​னார். தஸ்​கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 27 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 1.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 7 ரன்​கள் எடுத்​தது. மஹ்​முதுல் ஹசன் ராய் 2 ரன்களும், ஷத்​மான் இஸ்​லாம் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில் இருந்​தனர். 34 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்தை இன்​று தொடர்ந்​து விளை​யாடுகிறது.

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை
அதிமுகவில் கையெழுத்து வேட்டை: பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in