

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியைப் பெற்றதன் மூலம் வங்கதேச அணியின் வெற்றி சதவீதம் 58.33 சதவீதத்தில் இருந்து 66.67 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை வங்கதேசம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 40 புள்ளிகளைப் பெற்றுள்ள வங்கதேச அணி பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 77.77 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. புள்ளிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து 72.22 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றன.
இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவு மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.