எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமே: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமே: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து
Updated on
2 min read

சென்னை: ​கா​விரி நதி நீர், மேகே​தாட்டு அணை என பல பிரச்​சினை​களுக்கு எதி​ராக போராடு​கிறோம். எனவே, எங்​களுக்கு ஒவ்​வொரு நாளும் போராட்​டமே என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

நாம் தமிழர் கட்சி முன்​னெடுப்​பில், அனைத்​துக் கட்​சிகள் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி, தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன், தமிழ்​நாடு கொங்கு இளைஞர் பேரவை தலை​வர் தனியரசு, தென்​னிந்​திய பார்​வர்ட் பிளாக் கட்சி தலை​வர் திரு​மாறன், புரட்சி பாரதம் கட்சி தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்தி உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறிய​தாவது: காவிரி நதி நீர் பிரச்​சினையை ஒவ்​வொரு ஆண்​டும் எதிர்​கொள்​கிறோம்.

புதி​ய​தாக மேகே​தாட்டு பிரச்​சினை, தொகுதி மறு​வரையறை பிரச்​சினை, போதை மிகு​தி​யால் நடக்​கும் படு​கொலைகள் மற்​றும் பாலியல் வன்​கொடுமை​களுக்கு எதி​ராக போராடு​கிறோம்.

எனவே, எங்​களுக்கு ஒவ்​வொரு நாளும் போராட்​டமே. தமிழ் தேசிய இனத்​தின் பிள்​ளை​கள் என்ற அரசி​யல் குடை​யின் கீழ் ஒன்​றிணைந்​து, வலிமை​யான அரசி​யல் படை​யாக ஒருங்​கிணைந்து செயல்​படு​கிறோம்.

மேகமலை​யில் பல தலை​முறை​களாக வாழும் மக்​களை அகற்​று​வது பெரிய துன்​பம். மேகமலை பகு​தி​களில் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்​ட​தாக வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

பல ஆண்​டு​களாக அவர்​கள் வாழ்ந்து கொண்​டிருக்​கும்​போது அதை எப்​படி ஆக்​ரமிப்பு என்று கூற முடி​யும். அப்​போது நடவடிக்கை எடுக்​காமல் தற்​போது நடவடிக்கை எடுப்​பது எந்த வகை​யில் நியா​யம்?இவ்​வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி கூறுகை​யில்​, “​மாஞ்​சோலை, மேகமலை மக்​கள் யாருக்​கும் எந்த தொல்​லை​யும் கொடுக்​க​வில்​லை.

எனவே, இம்​மக்​களுக்கு மாற்று ஏற்​பாடு செய்​யும் வரை, எங்​களால் அந்த மக்​களை வெளி​யேற்ற முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் பிர​மாணப்​பத்​திரத்தை தமிழக அரசு தாக்​கல் செய்ய வேண்​டும்.

மாஞ்​சோலை மக்​களின் வாழ்​விடத்தை மாற்​றக்​கூ​டாது என வலி​யுறுத்தி அனைத்து கட்சி சார்​பில், வரும் 29-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். செப். 2-வது வாரத்​தில் மேகமலை மக்​களுக்​காக போராட்​டம் நடை​பெறும்” என்​றார்.

தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறுகை​யில், “கர்​நாட​கா​வில் வனப்​பகு​தியில் 3 தமிழர்​களை வனத்​துறை​யினர் சுட்​டு​கொன்​றுள்​ளனர்.

இதை கண்​டித்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட தமிழர்​களை கர்​நாடக காவல்​துறை காட்​டுமி​ராண்​டித் தனமாக தாக்​கி​யுள்​ளது. 5 பேரை கைது செய்​துள்​ளது. இதை வன்​மை​யாக கண்​டிக்​கிறோம்.

அப்​பாவி தமிழர்​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்டு 24 மணி நேரம் கடந்​தும் தமிழக முதல்​வரிடம் இருந்து கண்​டனம் வரவில்​லை. உடனடி​யாக, தமிழக கூடு​தல் தலை​மைச்​செயலர், கூடு​தல் காவல்​துறை இயக்​குநர் தலை​மை​யில் ஒரு குழுவை அனுப்​பி, கர்​நாடக முதல்​வரை சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி,

இந்த படு​கொலைகளுக்கு வனத்​துறை​யினர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​ய, தமிழக முதல்​வர்​ அழுத்​தம்​ கொடுக்​க வேண்​டும்​” என்​றார்​.

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமே: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து
விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in