கேம்பெல் தாம்சன் அபார பந்து வீச்சு: 54 ரன்களுக்கு சுருண்டு வங்கதேசம் படுதோல்வி

கேம்பெல் தாம்சன் அபார பந்து வீச்சு: 54 ரன்களுக்கு சுருண்டு வங்கதேசம் படுதோல்வி
Updated on
1 min read

டார்வின்: வங்​கதேச கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஆஸ்​திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதி​ராக 3 நாட்​கள் பயிற்சி ஆட்​டத்​தில் வங்​கதேச அணி விளை​யாடியது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 263 ரன்​களும், ஆஸ்​திரேலிய பிரதமர் லெவன் 355 ரன்​களும் எடுத்​தன. 92 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 22 ஓவர்​களில் 54 ரன்​களுக்கு அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்​தது. இதனால் ஆஸ்​திரேலிய பிரதமர் லெவன் அணி இன்​னிங்ஸ் மற்​றும் 38 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

வங்​கதேச அணி தரப்​பில் அதி​கபட்​ச​மாக தன்​ஸித் ஹசன் 22 ரன்கள் சேர்த்​தார். மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்கை ரன்னை எட்​ட​வில்​லை. ஆஸ்​திரேலிய பிரதமர் லெவன் அணி தரப்​பில் இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான கேம்​பெல் தாம்​சன் 11 ஓவர்​களை வீசி 2 மெய்​டன்​களு​டன் 25 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 8 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கோரி ரோக்​கிச்​சி​யோலி 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

ஆஸ்​திரேலியா - வங்​கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வரும் 13-ம் தேதி டார்​வினில் உள்ள மா​ராரா கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​குகிறது.

கேம்பெல் தாம்சன் அபார பந்து வீச்சு: 54 ரன்களுக்கு சுருண்டு வங்கதேசம் படுதோல்வி
ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. தொலைவுக்கு சாலை: பவன் கல்யாண் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in