ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. தொலைவுக்கு சாலை: பவன் கல்யாண் தகவல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

அமராவதி: ஆந்​தி​ரா​வில் பழங்​குடி​யினரின் வசதிக்​காக வனப்​பகு​தி​களில் 905 கி.மீ. தொலை​வுக்கு தார் சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது என்று துணை முதல்​வர் பவன் கல்​யாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

‘வனத்​தாய் மார்​கம்’ திட்​டத்​தின் கீழ் பழங்குடியினருக்​காக ஆந்​தி​ரா​வின் மலைப்​பகு​தி​களில் குக்​கி​ராமங்​களுக்​கும் தார் சாலை வசதி செய்ய திட்​ட​மிடப்​பட்​டது.

மொத்​தம் 2,310 கி.மீ தொலை​வுக்கு தார் சாலைகள் அமைக்க ரூ.2,078 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. தெலுங்கு தேசம் கட்​சி​யின் ஆட்​சி​யில் இது​வரை 905 கி.மீ. தொலை​வுக்கு வனப்​பகு​தி​களில் தார் சாலைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மலைகள், காடு​கள், மேடு பள்​ளங்​களை சரிசெய்து வாக​னங்​கள் எவ்​வித சிரம​மும் இன்றி செல்​லும் வகை​யில் சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும் ரூ.1,005 கோடி செல​வில் பழங்​குடி​யினர் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் செய்​யப்பட உள்​ளன. இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஆஷிஸ் யாதவ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in