ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 4-வது சுற்றில் சின்னர், மேடிசன் கீஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 4-வது சுற்றில் சின்னர், மேடிசன் கீஸ்
Updated on
2 min read

மெல்பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பியன்​களான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸ் ஆகியோர் 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 7-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் 3-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் நடப்பு சாம்​பியனும் முதல் நிலை வீரரு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் 85-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் எலியட் ஸ்பிஸ்​ஸிரியை வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

5-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரன்ஸோ முசெட்டி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்​கில் 24-ம் நிலை வீர​ரான செக்​குடியரசின் தாமஸ் மச்​சக்​கை​யும், 8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்​கில் 30-ம் நிலை வீர​ரான மொனாக்​கோ​வின் வாலண்​டைன் வச்​செரோட்​டை​யும், 22-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லூசி​யானோ டார்​டெரி 7-6 (7-5), 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 15-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவை​யும் வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

9-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-5), 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் சுவிட்​சர்​லாந்​தின் வாவ்​ரிங்காவை வீழ்த்​தி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் நடப்பு சாம்​பியனும் 9-ம் நிலை வீராங்​க​னை​யு​மான அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் செக்​குடியரசின் கரோலினா பிளிஸ்​கோ​வாவை​யும், 4-ம் நிலை வீர​ராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோவா 6-1, 6-4 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த பெய்​டன் ஸ்டெர்ன்​ஸை​யும் வீழ்த்தி 4-வது சுற்​றில் கால்​ப​தித்​தனர்.

6-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் ரஷ்​யா​வின் ஒக்​ஸானா செலக்​மெதே​வாவை​யும், 21-ம் நிலை வீராங்​க​னை​யான பெல்​ஜி​யத்​தின் எலிஸ் மெர்​டன்ஸ் 6-0, 6-4 என்ற செட் கணக்​கில் செக்​குடியரசின் நிகோலா பார்​துங்​கோ​வாவை​யும் வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

16-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசா​கா, ஆஸ்​திரேலி​யா​வின் தகுதி நிலை வீராங்​க​னை​யான மேடிசன் இங்​லிஸுடன் மோது​வ​தாக இருந்​தார். ஆனால் காயம் காரண​மாக நவோமி ஒசாகா வில​கி​னார். இதனால் மேடிசன் இங்​லிஷ் 4-வது சுற்​றில் நுழைந்​தார். 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்​கில் 31-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் அனா கலின்​ஸ்​க​யாவை வீழ்த்தி 4-வது சுற்​றில் நுழைந்​தார்.

3-வது சுற்​றில் பாம்ப்ரி ஜோடி: ஆடவர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் என்​.​ராம் பாலாஜி, ஆஸ்​திரேலி​யா​வின் நீல் ஓபர்​லீட்​னர் ஜோடி 5-7, 1-6 என்ற செட் கணக்​கில் எல் சால்​வ​டாரின் மார்​செலோ அரேவலோ, குரோஷி​யா​வின் மேட் பாவிக் ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது.

அதேவேளை​யில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்​ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரான்​சன் ஜோடி 4-6, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்​கில் மெக்​சிகோ​வின் சாண்​டி​யாகோ கோன்​சலஸ், பிரான்​ஸின் டேவிட் பெல்​ ஜோடியை தோற்​கடித்​து 3-வது சுற்​றுக்​கு முன்​னேறியது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 4-வது சுற்றில் சின்னர், மேடிசன் கீஸ்
‘ஒரு மாவட்டம், ஒரு உணவு திட்டம்’ - உ.பி.யில் அமித் ஷா தொடங்கி வைத்​தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in