

லக்னோ: உ.பி.யில் ‘ஒரு மாவட்டம், ஒரு உணவு’ திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
உ.பி.யின் முன்னோடி திட்டமான ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய உணவு மற்றும் பான வகைகளுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உத்தரபிரதேச தினத்தை முன்னிட்டு, லக்னோவில் உள்ள தேசிய உத்வேக தலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ திட்டம் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. அதேபோல் ‘ஒரு மாவட்டம், ஒரு உணவு’ திட்டமும் உலகளாவிய சந்தைகளுக்கு செல்லும்’’ என்றனர்.