ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா
Updated on
2 min read

மெல்பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் 7-6 (7-4), 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் 102-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் யானிக் ஹான்ஃப்​மேனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்​னேறி​னார்.

10-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்ளிக் 7-5, 6-4, 7-5 என்ற செட் கணக்​கில் 54-ம் நிலை வீரரான ஹங்​கேரி​யின் மார்​டன் ஃபுசோவிக்​ஸை​யும், 11-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மெத்​வ​தேவ் 6-7 (9-11), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் 83-ம் நிலை வீர​ரான பிரான்ஸின் குவென்​டின் ஹாலிஸை​யும், 13-ம் நிலை வீரரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவ் 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்​கில் 151-ம் நிலை வீர​ரான போர்ச்​சுகலின் ஜெய்ம் ஃபரி​யா​வை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்தனர்.

14-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் அலெஜான்ட்ரோ டேவிடோ​விச் ஃபோகின் 6-3, 7-6 (7-3), 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்​கில் 63-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் ரெய்லி ஓபெல்​காவை​யும், 18-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் பிரான்​சிஸ்கோ செருண்​டோலோ 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் 66-ம் நிலை வீர​ரான போஸ்​னி​யா-ஹெர்​ சகோவின் டாமிர் ட்சும்​ஹூரை​யும், 19-ம்நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பால் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 103-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் தியாகோ டிரண்​டேவை​யும் தோற்​கடித்து 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீராங்க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் தகுதி நிலை வீராங்கனையான சீனா​வின் பா ஜூவோஸு​வானை​யும், 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் 6-2, 6-2 என்ற செட் கணக்​கில் 69-ம் நிலை வீராங்கனை​யான செர்​பி​யா​வின் ஓல்கா டானிலோவிக்​கை​யும், 7-ம் நிலை வீராங்​க​னையான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலி 6-2, 6-3 என்ற செட் கணக்​கில் 57-ம் நிலை வீராங்க​னை​யான போலந்​தின் மாக்​டலீனா ஃப்​ரீச்​சை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

8-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-4 என்ற செட் கணக்​கில் 53-ம் நிலை வீராங்​க​னை​யான கிரீஸின் மரியா சக்​காரியை​யும், 13-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 7-5, 6-1 என்ற செட் கணக்​கில் 134-ம் நிலை வீராங்க​னை​யான போலந்​தின் லிண்டா கிளிமோவி​கோவாவையும், 14-ம் நிலை வீராங்​க​னை​யான டென்​மார்க்​கின் கிளாரா டவுசன் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்​கில் 150-ம் நிலை வீராங்​க​னை​யான உஸ்​பெகிஸ்​தானின் போலினா குடெர்​மெடோ​வாவை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்தனர்.

28-ம் நிலை வீராங்​க​னை​யான கிரேட் பிரிட்​டனின் எம்மாரடு​கானு 6-7 (3-7), 2-6 என்ற செட் கணக்​கில் 55-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரி​யா​வின் அனஸ்​டசியா பொட்​டா​போ​வா​விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். 17-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் விக்​டோரியா எம்​போகோ 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் கேட் மெக்​நல்​லியை​யும், 19-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் கரோரினா முச்​சோவா 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் அலிசியா பார்க்​ஸை​யும், 23-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் டயானா ஷ்னைடர் 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்திரேலியாவின் தலியா கிப்​சனை​யும் வீழ்த்​தினர்.

இந்​திய ஜோடி அசத்​தல்:

ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்​ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்​சன் ஜோடி முதல் சுற்​றில் 6-3 6-4 என்ற நேர் செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் ஜேம்ஸ் டக்​வொர்த், குரூஸ் ஹெவிட் ஜோடியை வீழ்த்​தி​யது.

ஜூனியர் தகுதி சுற்று

ஆஸ்​திரேலிய ஓபன் ஜூனியர் பிரி​வில் நேற்று தகுதி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் தியா ரமேஷ், தரவரிசை​யில் 86-வது இடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் அனி​தாவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டத்​தில் தியா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். தகுதி சுற்​றின் 2-வது ஆட்​டத்​துக்கு முன்​னேறி​யுள்ள தியா ரமேஷ் தமிழக டென்​னிஸ் சங்​கத்​தின் நெக்ஸ் லெவல் திட்​டத்​தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in