ஆஸி. ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா

ஆஸி. ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா
Updated on
1 min read

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், 6-வது இடத்தில் உள்ள சீனாவின் சோ டியன் சென்னுடன் மோதினார்.

86 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 17-21, 24-22, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 26-ம் நிலை வீரரான ஜப்பானின் யுஷி தனகாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் லக்‌ஷயா சென்.

ஆஸி. ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா
3-வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in