ஐபிஎல் தொடரில் முதற்கட்ட போட்டிகளை தவறவிடும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் முதற்கட்ட போட்டிகளை தவறவிடும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்!
Updated on
2 min read

மெர்பர்ன்: 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரின் பல்​வேறு அணி​களில் இடம் பெற்​றுள்ள ஆஸ்​திரேலி​யா​வின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாளர்​கள் காயம் காரண​மாக அவதிப்​பட்டு வரு​கின்​றனர்.

சிஎஸ்கே அணி​யில் இடம் பெற்​றிருந்த நேதன் எல்​லிஸ் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக ஒட்டுமொத்த சீசனில் இருந்​தும் வில​கி​யுள்​ளார். இது ஒருபுறம் இருக்க வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ள பிஸி​யான கால அட்​ட​வணை​யைக் கருத்தில் கொண்டு ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் தனது வேகப்​பந்து வீச்​சாளர்​களின் காயங்​கள் தொடர்பான விஷ​யத்​தில் மிகுந்த கவனத்​துடன் செயல்​பட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளியாகிஉள்​ளன.

ஏனெனில் அடுத்த 12 மாத காலத்​தில் ஆஸ்​திரேலிய அணி 21 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட உள்​ளது. இதனால் பாட் கம்​மின்​ஸ், ஜோஷ் ஹேசில்​வுட், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்​கேற்பது என்​பது, அடுத்த சில வாரங்​களில் அவர்​களு​டைய உடற்​தகுதி முன்னேற்றத்​தைப் பொறுத்தே அமை​யும் என ஆஸ்திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் தரப்​பில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

ஆஸ்​திரேலிய அணி​யின் டெஸ்ட் அணி​யின் கேப்​ட​னான பாட் கம்​மின்ஸ் முதுகு பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரணமாக கடந்த கோடை​யில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்​டுமே விளை​யாடி​னார். அதே சமயம், ஹேசில்​வுட் தொடைப்​பகுதி மற்​றும் கணுக்​கால் பிரச்​சினை​கள் காரண​மாக ஆஷஸ் தொடர் முழு​வதை​யும் தவற​விட்​டார். இவர்​கள் இரு​வரும் டி 20 உலகக் கோப்பை தொடரிலும் பங்​கேற்​க​வில்​லை.

மிட்​செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரின் 5 ஆட்​டங்​களி​லும் விளை​யாடி​னார். மேலும் பிக்​பாஷ் டி 20 தொடரிலும் பங்கேற்​றார். ஆனால் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து அவர், ஓய்வு பெற்​று​விட்​ட​தால் உலகக் கோப்​பை​யில் விளை​யாட​வில்​லை. ஐபிஎல் தொடரில் பாட் கம்​மின்ஸ் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​யிலும், ஜோஷ் ஹேசில்​வுட் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யிலும், மிட்​செல் ஸ்டார்க் டெல்லி கேப் பிடல்ஸ் அணி​யிலும் இடம் பெற்​றுள்​ளனர்.

கேகேஆர் அணியில் ராணா விலகல்

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி தனது முதல் ஆட்​டத்​தில் 29-ம் தேதி மும்பை இந்​தி​யன்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது. இந்​நிலை​யில் கேகேஆர் அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஹர்​ஷித் ராணா, தசை​நார் காயம் காரண​மாக ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடருக்​கான பயிற்சி ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக விளை​யாடிய போது ஹர்​ஷித் ராணா​வின் வலது முழங்​காலில் தசை​நார் கிழிவு ஏற்​பட்​டது. இந்த காயத்​துக்​காக அவர், கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்​திருந்​தார். இதனால் ஹர்​ஷித் ராணா தற்​போது நீண்ட கால உடற்​ப​யிற்சி மற்​றும் காயத்​தில் இருந்து முழு​மை​யாக மீண்​டு​வரு​வதற்​கான சிகிச்சை முறை​களை மேற்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. இதனாலேயே ஐபிஎல் தொடரில் அவர், வில​கி​யுள்​ளார்.

ஐபிஎல் தொடரில் முதற்கட்ட போட்டிகளை தவறவிடும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்!
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in