ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்
Updated on: 
1 min read

ஜலந்தர்: ஆட​வருக்​கான ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பஞ்​சாப்​பில் உள்ள ஜலந்​தரில் இன்று தொடங்​கு​கிறது.

இதில் 5 முறை சாம்​பியனான இந்​தியா உள்​ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்​கின்​றன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று வங்​கதேசத்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

முன்​னதாக பிற்​பகல் 1 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் மலேசியா - சீனா அணி​களும், 3.15 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் ஜப்​பான் - தென் கொரியா அணி​களும் மோதுகின்​றன.

பஞ்​சாப்​பில் 17 ஆண்​டுகளுக்கு பிறகு தற்​போது​தான் சர்​வ​தேச ஹாக்கி தொடர் நடத்​தப்​படு​கிறது. கடைசி​யாக இங்கு 2009-ம் ஆண்டு கோல்டு கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று இருந்தது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பஞ்சாபில் இன்று தொடக்கம்
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடர்: 184 ரன்களுக்கு ரயில்வே ஆட்டமிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in