ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடர்: 184 ரன்களுக்கு ரயில்வே ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடர்: 184 ரன்களுக்கு ரயில்வே ஆட்டமிழப்பு
Updated on: 
1 min read

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு - ரயில்​வேஸ் அணிகள் இடை​யி​லான ஆட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. முதலில் பேட் செய்த ரயில்​வேஸ் அணி 53.3 ஓவர்​களில் 184 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சுபைர் அலி 75 ரன்​கள் சேர்த்​தார்.

தமிழக அணி தரப்​பில் சோனு யாதவ், கேப்​டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஜெகநாதன் ஹெம்​சுதேஷன் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினார். இதையடுத்து பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 25 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 71 ரன்​கள் சேர்த்​தது.

விமல் குமார் 0, நாராயண் ஜெகதீசன் 30, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 19 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பாபா இந்​திரஜித் 13, ஆந்த்ரே சித்​தார்த் 8 ரன்​களில் ஆட்​ட​மிழக்காமல் உள்ளனர். கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க 113 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள தமிழக அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடர்: 184 ரன்களுக்கு ரயில்வே ஆட்டமிழப்பு
தேனி மாவட்ட சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in