விளையாட்டு விடு​தி​களில் சேர மே 6-ம் தேதிக்​குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடு​தி​களில் சேர மே 6-ம் தேதிக்​குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் விளை​யாட்டு விடு​தி​களில் சேர மே 6-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும் என தமிழ்​நாடு விளையாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் ​(எஸ்​டிஏடி) அறிவித்துள்​ளது.

பள்ளி மாணவ, மாண​வியர்​களுக்​காக தமிழகம் முழு​வதும் 28 இடங்​களில் அறி​வியல் பூர்​வ​மான பயிற்​சி, சத்​தான உணவு மற்றும் தங்​குமிட வசதி​யுடன் கூடிய விளை​யாட்டு விடு​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் கீழ் செயல்​பட்டு வரும் இந்த விளை​யாட்டு விடுதிகளில், 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான மாணவ, மாண​வியர் சேர்க்கை தற்​போது நடை​பெற்று வரு​கிறது.

விருப்​ப​முள்ள 6, 7, 8, 9 மற்​றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் www.sdat.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிக்​கலாம். பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை வரும் மே 6-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பித்த மாணவர்​களுக்​கான தடகளம், கூடைப்​பந்​து, கால்​பந்​து, ஹாக்​கி, கபடி, வாலி​பால், கிரிக்​கெட், ஹேண்ட்​பால் ஆகிய மாவட்ட அளவி​லான தேர்வு போட்​டிகள் அந்​தந்த மாவட்ட விளை​யாட்​டரங்​கு​களில் நடை​பெறும்.

அந்​தவகை​யில், மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் மே 7-ம் தேதி​யும், மாணவி​களுக்​கான தேர்​வு​கள் மே 8-ம் தேதி​யும் காலை 7 மணியள​வில் தொடங்​கு​கின்​றன. மாநில அளவி​லான தேர்​வு​கள் மே 12-ம் தேதி தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்ளன.

அதன்​படி, சென்​னை​யில் வாள்​வீச்​சு, ஜூடோ, குத்​துச்​சண்​டை, ஸ்கு​வாஷ் மற்​றும் நீச்​சல் போட்​டிகளுக்​கான தேர்​வு​களும், தஞ்​சாவூரில் பளுதூக்​குதல், திருச்​சி​யில் வுஷூ, கடலூரில் மல்​யுத்​தம், கிருஷ்ணகிரி​யில் டேக்​வாண்டோ மற்​றும் விழுப்​புரத்​தில் மல்​லர்​கம்​பம் ஆகிய போட்​டிகளுக்​கான தேர்​வு​களும் நடை​பெறுகின்​றன. தகு​தி​யுள்ள மாணவர்​கள் இந்த வாய்ப்​பை பயன்​படுத்​தி கொள்​ளு​மாறு தமிழ்​நாடு விளை​யாட்​டு மேம்​பாட்​டு ஆணையம்​ அறிவுறுத்​தியுள்​ளது.

விளையாட்டு விடு​தி​களில் சேர மே 6-ம் தேதிக்​குள் விண்ணப்பிக்கலாம்
‘ஐபிஎல் ஒரு பெரிய வர்த்தகம்... நியாயமான போட்டிகளை எதிர்பார்க்க முடியாது!’ - முரளிதரன் ஓபன் டாக்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in