சிஎஸ்கே அணியில் ஆகாஷ் மத்வால்

சிஎஸ்கே அணியில் ஆகாஷ் மத்வால்
Updated on
1 min read

சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரே கடந்த 18-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். காயத்தில் இருந்து குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே அணி ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசன்களில் ஆகாஷ் மத்வால் மும்பை, ராஜஸ்தான் அணிகளில் இடம் பெற்றிருந்தார்.

சிஎஸ்கே அணியில் ஆகாஷ் மத்வால்
வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிட்டார் மம்தா: ஹுமாயூன் கபீர் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in