

முர்ஷிதாபாத்: எங்கள் கட்சியின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று ஆம் ஜனதா உன்னாயன் கட்சி (ஏஜேயுபி) தலைவர் ஹுமாயூன் கபீர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு நேற்று முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏஜேயுபி கட்சித் தலைவர் ஹுமாயூன் கபீர் முர்ஷிதாபாத் மாவட்டம் நவோடா சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஷிப்நகர் கிராம வாக்குச்சாவடிக்குச் சென்றார்.
அப்போது அவரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்கள் கட்சியைச் சேர்ந்த 27 வேட்பாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி விலை கொடுத்து வாங்கிவிட்டார். ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூ.9 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கொடுத்துள்ளார். நாங்கள் முதலில் 142 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தோம். 27 வேட்பாளர்களை வாங்கியதால் தற்போது 115 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம்” என்றார் ஹுமாயூன் கபீர்