

காந்திநகர்: அகமதாபாத்தின் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா ஒட்டுமொத்தமாக 314 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் வான் ஜு ரி 315 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஜியான் சென் 355 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.