வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் கைது - நடந்தது என்ன?

திரும்பிச் செல்ல விமான நிலையம் வந்தபோது பிடிபட்டனர்
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் கைது - நடந்தது என்ன?
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை அரசியல் எதிர்​பார்ப்பு அதி​க​மாக இருந்​தது. இந்​நிலை​யில் பலர் வெளி​நாட்டு குடியுரிமை பெற்​றிருந்​தும் தமிழகம் வந்து வாக்களித்த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​திய நாட்டு குடிமக்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடை​பெறும் தேர்தல்​களில் வாக்​களிக்க முடி​யும். வெளி​நாடு​களில் நிரந்​தரமாகத் தங்​கி​யிருப்​ப​தோடு, அந்த நாட்டு பிரஜை​யாக​வும் மாறி குடி​யுரிமை பெற்​று ​விட்​டால் அவர்​களுக்கு இந்​திய பாஸ்​போர்ட்​டுகள் ரத்து செய்​யப்​பட்​டு, அந்த நாடு​களின் பாஸ்​போர்ட்​டு​கள் வழங்​கப்​பட்​டு​விடும்.

அப்​படிப்​பட்ட வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்ற இந்​தி​யர்​கள், இந்​தியா​வுக்கு வழக்​கம்​போல் வந்து சென்று கொண்​டிருக்​கலாம். ஆனால், இந்​தி​யா​வில் நடக்​கும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடியாது.

இந்​நிலை​யில்​தான் நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலில் வாக்​களிக்க, வெளி​நாடு​களில் வசிக்​கும் ஏராள​மான தமிழர்​கள், இங்கு வந்து சொந்​தத் தொகு​தி​யில் வாக்​களித்​த​தாக தகவல் வெளி​யானது.

இதுகுறித்து இந்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு தகவல் சென்றது. அவர்​கள் அறி​வுறுத்​தலின்​பேரில் சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை உள்​ளிட்ட விமான நிலை​யங்​களில் உள்ள குடி​யுரிமை அதிகாரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

வெளி​நாடு​களுக்​குச் செல்ல விமான நிலை​யம் வரும் பயணி​களின் கை விரல்​களைக் கண்​காணிக்க உத்​தர​விடப்​பட்​டது. வாக்​களித்த அடை​யாள மை இருந்​து, அவர்​கள் வெளி​நாடு வாழ் இந்​திய குடியுரிமை பெற்ற பயணி​யாக இருந்​தால், அவர்​களை விமானங்களில் பயணம் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம்.

அவர்​களின் விமானப் பயணங்​களை ரத்​துசெய்​து, அவர்​களை காவல் நிலை​யங்​களில் ஒப்​படைக்​கும்​படி​ அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்​படி வெளி​நாடு செல்ல சென்னை விமான நிலை​யம் வந்த சில வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​கள், தேர்​தல் ஆணைய விதி​முறை​களுக்குமாறாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்​துள்​ளது தெரிய​வந்​தது.

அவர்​கள் சென்னை உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வாக்​குச்​சாவடிகளில் வாக்​களித்​துள்​ளனர். அதே​போல தமிழகத்​தில் உள்ள பல்​வேறு விமான நிலை​யங்​களில் குடி​யுரிமை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யிலும் பலர் சிக்​கி​யுள்​ளனர்.

இப்​படி சென்னை உட்பட தமிழகம் முழு​வதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்​கள் ஆஸ்​திரேலி​யா, இலங்​கை, கனடா, ஐரோப்பா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் குடி​யுரிமை​கள் பெற்றவர்​கள் என்​று தெரிய​வந்​துள்​ளது.

வெளி​நாடு​களில் நிரந்தர குடி​யுரிமை பெற்​றிருந்​தா​லும் நடந்து முடிந்த எஸ்​ஐஆர் பணி​களில் இவர்​கள் ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பித்து வாக்​காளர் அடை​யாள அட்​டைகளைப் பெற்று வாக்​களித்​த​தாக தெரிய​வந்​துள்​ளது. இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்த காவல் துறைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் கைது - நடந்தது என்ன?
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in