அ​திரடிக்​கும், நிதானத்​துக்​கும் இடையி​லான சமநிலையை அபிஷேக் சர்மா கண்​டறிய அனில் கும்ப்ளே அறிவுரை

அ​திரடிக்​கும், நிதானத்​துக்​கும் இடையி​லான சமநிலையை  அபிஷேக் சர்மா கண்​டறிய அனில் கும்ப்ளே அறிவுரை
Updated on
1 min read

புதுடெல்லி: அதிரடி தொடக்க பேட்​ஸ்​மே​னான அபிஷேக் சர்மா, தனது ஆக்​ரோஷ​மான ஆட்​டத்​துக்​கும், களத்​தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாடு​வதற்​கும் இடையி​லான சரி​யான சமநிலை​யைக் கண்​டறிய வேண்டும் என்று இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும் பயிற்சி​யாள​ரு​மான அனில் கும்ப்ளே அறி​வுரை கூறியுள்ளார்.

இந்​திய டி20 கிரிக்​கெட் அணி​யில் 25 வயதான அபிஷேக் சர்மா சமீப காலங்​களில் டாப் ஆர்​டர் வரிசை​யில் மிக​வும் அதிரடி​யான பேட்​டர்​களில் ஒரு​வ​ராகத் திகழ்​கிறார். அதிக ஆபத்து நிறைந்த அதேசம​யம் அதிக பலன் தரும் தனது அதிரடி ஆட்​டத்​தின் மூலம், அடிக்​கடி தனது அணிக்கு ஒரு மின்​னல் வேகத் தொடக்​கத்​தைத் கொடுத்து வரு​கிறார்.

இருப்​பினும் அந்த வேக​மான தொடக்​கங்​களை பெரிய ஸ்கோ​ராக மாற்ற முடி​யாமல் அவர், அடிக்​கடி தடுமாறுவது தொடர்​கதை​யாக உள்​ளது. இந்​நிலை​யில் ஜியோ ஸ்டார் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும் பயிற்​சி​யாள​ரு​மான அனில் கும்ப்ளே கூறிய​தாவது:

அபிஷேக் சர்​மாவை நான், வீரேந்​திர ஷேவாக் போன்ற வீரருடன் ஒப்​பிடு​வேன், ஏனென்​றால் அவரும் ஒவ்​வொரு பந்​தை​யும் அடித்து ஆடவே நினைப்​பார். ஷேவாக் டெஸ்ட் கிரிக்​கெட்​டிலிருந்து ஒரு​நாள் போட்​டிகளுக்​கும், அதன் பிறகு டி20 போட்​டிகளுக்​கும் மாறிய​போது, தனது இன்னிங்ஸை சற்று வித்​தி​யாச​மான வேகத்​தில் கொண்டு செல்ல வேண்​டும் என்​பதை அவர் உணர்ந்​தார். இருப்பினும் ஷேவாக் 140-150 ஸ்டிரைக் ரேட்​டிலேயே ரன்களைக் குவிப்​பார்.

அபிஷேக் சர்மா இதைப் பற்​றித்​தான் யோசிக்​கத் தொடங்க வேண்​டும். நான் 200 ஸ்டிரைக் ரேட்​டில் ரன் எடுத்து வரு​கிறேன், என் மீது அதிக எதிர்​பார்ப்​பு​கள் உள்ளன, இப்​போது நான் 300 ஸ்டிரைக் ரேட்​டில் ஆட வேண்டு​மா?’ என்று அவர் தன்​னைத்​தானே கேட்​டுக்​கொள்ளக் கூடாது. அவர், சாதா​ரண​மாக இருந்​தால் போதும். அதி​கப்​படி​யான பந்​துகளைச் சந்​தித்து விளையாட வேண்டும்.

அபிஷேக் சர்மா ஒரு இன்​னிங்​ஸில் 20 பந்​துகள் விளையாடி​னாலே, அவர் 50 ரன்​களை நெருங்​கி​விடு​வார். இதை நாம் சஞ்சு சாம்​சனிடம் பார்த்​திருக்​கிறோம். அவர், 40 அல்​லது 50 ரன்​களில் ஆட்​ட​மிழக்​காமல், ஆட்​டத்தை இன்​னும் ஆழமாகக் கொண்டு சென்று 85 முதல் 90 ரன்​கள் வரை குவித்து அந்த இன்​னிங்ஸை அர்த்​த​முள்​ள​தாக மாற்றுகிறார்.

டி20 போட்​டிகளில் இது​தான் மிக முக்​கிய​மானது. அத்தகைய ஒரு முதிர்ச்​சியை இந்த சீசனில் அபிஷேக் சர்மா​விடம் நாம் காணலாம். சன்​ரைசர்​ஸ் ஹைத​ரா​பாத் அணியும் அவரிட​மிருந்து அதையே​தான் எதிர்​பார்க்​கும்​. இவ்வாறு அனில்​ கும்ப்​ளே கூறி​னார்.

அ​திரடிக்​கும், நிதானத்​துக்​கும் இடையி​லான சமநிலையை  அபிஷேக் சர்மா கண்​டறிய அனில் கும்ப்ளே அறிவுரை
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in