

துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும் இஷான் கிஷன் 2-வது இடத்திலும் தொடர்கின்றனர். திலக் வர்மா 6-வது இடத்திலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
நியூஸிலாந்தின் டிம் ஷெய்பர்ட் ஓர் இடத்தை இழந்து 9-வது இடத்தில் உள்ளார். மற்றபடி 10-ல் பெரிய மாற்றங்கள் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 2-வது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 5-வது இடத்திலும் உள்ளனர்.