Published : 17 May 2023 08:28 AM
Last Updated : 17 May 2023 08:28 AM

பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்தார் பிரனாய்

பிரனாய் | கோப்புப்படம்

புதுடெல்லி: சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் இரு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிச்சந்த் ஜோடியும் இரு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை அடைந்துள்ளனர்.

17 தொடர்களில் விளையாடி உள்ள பிரனாய் 66,147 புள்ளிகளை பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான லக்சயா சென் 22-வது இடத்திலும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 11-வது இடத்தில் உள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இரு இடங்கள் பின்தங்கி 7-வது இடத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x