Last Updated : 25 Sep, 2017 06:25 PM

 

Published : 25 Sep 2017 06:25 PM
Last Updated : 25 Sep 2017 06:25 PM

பத்மபூஷண் விருதுக்கு பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரை 

பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பெயரை பத்மபூஷண் விருதுக்காக மத்திய அரசிடம் விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.  

உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை வெண்கலம் பெற்ற சிந்து, கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.  

சீனா ஓபன் சீரிஸ் ப்ரிமியர், இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ், கொரியா ஓபன் சீரிஸ் ஆகியவற்றில் வெற்றிகண்ட அசகாய வீராங்கனை சிந்து.  

காமன்வெல்த் விளையாட்டுகள், உபர் கப், ஆசியன் சாம்பின்ஷிப், இன்சியோன் (Incheon) ஆசிய விளையாட்டு ஆகியவற்றில் 4 வெண்கலப் பதக்கங்களையும் சிந்து கைப்பற்றியிருந்தார்.  

கிளாஸ்கோ உலக சாம்பினஸ்ஷிப்பில் வெற்றி, 3 முறை மக்காவ் ஓபன் சாம்பியன், சையத் மோடி க்ராண்ட் ப்ரீ தங்கம் என சிந்து கடந்து வந்த தூரங்களும் வென்ற பதக்கங்களும் நீளமானவை.  

தன்னுடைய தொடர்ச்சியான வெற்றிகளால் கடந்த ஏப்ரலில் வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் சிந்து. 

இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ, கடந்த மார்ச் 2015-ல் சிந்துவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x