Last Updated : 06 Sep, 2017 03:25 PM

 

Published : 06 Sep 2017 03:25 PM
Last Updated : 06 Sep 2017 03:25 PM

இந்த கிரிக்கெட் சீசனுக்கு தரமான பிட்ச்கள் அமைக்கப்படும்: தலைமை பிட்ச் தயாரிப்பாளர் உறுதி

வரவிருக்கும் கிரிக்கெட் சீசனுக்கு தரமான பிட்ச்களே தயாரிக்கப்படும் என்று தலைமைப் பிட்ச் தயாரிப்பாளர் தல்ஜித் சிங் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு பந்துகள் கன்னாபின்னாவென்று திரும்பும் பிட்ச்கள் அமைக்கப்பட்டன என்று அர்த்தமல்ல. ஆனால் இந்த ஆண்டு தரமான பிட்ச்களை அமைக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது, இதனையடுத்தே இந்த கிரிக்கெட் சீசனுக்கு தரமான பிட்ச்களைக் காணலாம்” என்றார் தல்ஜித்.

இது குறித்து 26 பிட்ச் தயாரிபாளர்கள் கலந்து கொண்ட பட்டறை நடைபெற்றது. இதில் உயிரோட்டமுள்ள பிட்ச்களை உருவாக்க மாதிரி சட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி வாரியத்தின் பொறுப்புச் செயலர் அமிதாப் சவுத்ரி கூறும்போது, “நடுநிலை மைதானங்கள் என்ற கருத்தாக்கம் கடந்த சீசனில் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது கிரிக்கெட் உணர்வுக்குரியதாக இல்லை. தங்கள் சொந்த மாநில மைதானம் மற்றும் எதிரணியினரின் மாநில மைதானங்களில் ஆடுவதற்கு மேலதிக ஆதரவுக்குரல்கள் எழுந்தன. இப்படித்தான் உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடப்படுகின்றன. இதனால் பிட்ச் தயாரிப்பாளர்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது, இனி பிட்ச் தயாரிப்புக்கு எதிராக ஒருவரும் விரலை உயர்த்த முடியாது” என்றார்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு சாதகமாக பிட்ச்கள்:

2015-16 சீசனில் 9 உள்நாட்டுப் போட்டிகள் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட பிட்ச்களில் நடைபெற்றதாக பிசிசிஐ மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் தன் பிட்ச்களை குழிப்பிட்சிலிருந்து பாதாள பிட்ச்களுக்கு மாற்றியதால் ரவீந்திர ஜடேஜா தொடர்ச்சியாக 6 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடிந்தது.

“இந்த சீசனில் கண்டிப்பான கண்காணிப்பு இருக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பாக மாநில கிரிக்கெட் கூட்டமைப்புகள் முறையற்ற, தரமற்ற பிட்ச்களை தயாரித்து வழங்கியது இம்முறை நடக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம், இப்படிப்பட்ட குழி-பாதாள பிட்ச்களை தயாரித்தால் அபராதம் விதிக்கும் நடைமுறையை பிசிசிஐ கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கிறேன்” என்றார் தல்ஜித் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x