Published : 10 Mar 2023 06:17 AM
Last Updated : 10 Mar 2023 06:17 AM

சென்னை ஒருநாள் போட்டிக்கு 13-ம் தேதி டிக்கெட் விற்பனை

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் கடைசி ஆட்டம் வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 13-ம்தேதியும் கவுன்டரில் நேரடி விற்பனை 18-ம் தேதியும் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,200 ஆகும். சி,டி,இ (லோயர்) ஆகிய கேலரிகளுக்கான இந்த டிக்கெட்களை 18-ம்தேதி காலை 11 மணி முதல் நேரடியாக கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம். ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான டிக்கெட்களை வரும் 13-ம் தேதி முதல் பேடிஎம், இன்சைடர் ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x