Published : 05 Mar 2023 07:38 PM
Last Updated : 05 Mar 2023 07:38 PM

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.

போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மெக்லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் டெல்லி அணியின் கேப்டன் மெக்லானிங் 43 பந்துகளில் 72 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ஷாஃபெயில் வர்மா 45 பந்துகளில் 84 ரன்களை குவித்து மிரட்டினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டு இழப்புக்கு 223 ரன்களை குவித்தது.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபியின் வீராங்கனைகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஸ்மிருது மந்தனா 23 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்தார். எல்லீஸி பெர்ரி 31 ரன்களையும், ஹீதர் நைட் 34 ரன்களையும், மீகன் 30 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. டெல்லி அணி தரப்பில் தாரா நோரீஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x