Published : 19 Sep 2017 10:16 AM
Last Updated : 19 Sep 2017 10:16 AM

சேப்பாக்கம் துளிகள்

சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. கடைசியாக 1987-ல் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டிருந்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் சராசரி 100.25 ஆக உள்ளது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 சதங்கள், ஒரு அரை சதம் என 401 ரன்கள் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 66 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி 7-வது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு பேட்டிங்கில் 27.80 சராசரி மட்டுமே கொண்டிருந்த தோனி இந்த ஆண்டில் அதனை 89.57 ஆக அதிகரித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 14 ஆட்டங்களில் 627 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும். சராசரி அடிப்படையில் இந்த ஆண்டு தோனிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது.

தோனி இதுவரை 212 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். இந்த வகை சாதனையில் அப்ரீடி (351), ஜெயசூர்யா (270), கிறிஸ் கெய்ல் (238) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

வெற்றி பெற்ற ஆட்டங்களில் தோனியினின் சராசரி 75.35 ஆக உள்ளது. இதுவரை இந்திய அணி வெற்றி பெற்ற 170 ஆட்டங்களில் தோனி 5,878 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் தோனி முதலிடம் வகிக்கிறார்.

ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிராக 76 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்களுக்கு அதிகமாகவும், 2 விக்கெட்களையும் கைப்பற்றும் 3-வது இந்திய வீரர் பாண்டியா. இதற்கு முன்னர் சச்சின் (141 ரன்கள், 4 விக்கெட்கள்), ராபின் சிங் (75 ரன்கள், 2 விக்கெட்கள்) ஆகியோர் இதேபோன்று ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

பாண்டியா 17 ஆட்டங்களில் 32 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். இந்த ஆண்டில் இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.

ஆடம் ஸம்பா ஓவரில் பாண்டியா தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார். ஓரே ஓவரில் அவர் இதே போன்று தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் பறக்க விடுவது இது 3-வது முறையாகும். டெஸ்ட்டிலும் அவர் ஒருமுறை ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி உள்ளார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி 36 ஆட்டங்களில் விளையாடி 28-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 7 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் 80 சதவீத வெற்றியை தேடிக்கொடுத்துள்ள முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x