Last Updated : 10 Sep, 2017 03:46 PM

 

Published : 10 Sep 2017 03:46 PM
Last Updated : 10 Sep 2017 03:46 PM

சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷூவாய் பெங் ஜோடி தோல்வியடைந்தது.

தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சானியா, ஷூவாய் ஜோடி அரை இறுதியில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், சீன தைபேவின் யங் ஜன் ஷான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது. முதல் செட்டில் சானியா ஜோடி 3-0 என முன்னிலை வகித்தது. ஆனால் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சுதாரித்துக் கொண்டு விளையாடி 3-3 என சமநிலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ஆதிக்கம் செலுத்தி முதல் செட்டை தன்வசப்படுத்தியது. இதேபோல் 2-வது செட்டிலும் சானியா ஜோடி 3-1 என முன்னிலை வகித்தது. ஆனால் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாதுர்யமாக செயல்பட்டு சானியா ஜோடியை வெளியேற்றியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x