Last Updated : 16 Sep, 2017 10:32 AM

 

Published : 16 Sep 2017 10:32 AM
Last Updated : 16 Sep 2017 10:32 AM

ஹாக்கியில் இந்தியா ஏமாற்றம்

டென் போஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த கிளப் அணியான டென் போஷ் அணியிடம் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணியுடம் மோதிய 2-வது ஆட்டத்தை இந்திய மகளிர் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டத்தில் இந்திய அணி, டென் போஷ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. டென் போஷ் அணித்தரப்பில் ஐரின் வான் டென் அஸெம் இரு கோல்களும், இம்கே ஹோக் ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணித்தரப்பில் நவ்தீப் கவுர் ஒரு கோல் அடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x