Last Updated : 17 Nov, 2016 10:15 AM

 

Published : 17 Nov 2016 10:15 AM
Last Updated : 17 Nov 2016 10:15 AM

சாய்னா நெவால் தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி யின் முதல் சுற்றில் இந்தியா வின் சாய்னா நெவால் தோல்வி யடைந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் காயம் அடைந்த பின்னர் சுமார் 3 மாத காலத்துக்கு பிறகு களமிறங்கிய சாய்னா 16-21, 21-19, 14-21 என்ற செட்களில் ஒரு மணி நேரம் போராடி தாய்லாந்தின் புரனா பிரசர்ட்சுக்கிடம் தோல்வியடைந் தார். 7-ம் நிலை வீராங்கனையும் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து 21-12, 21-16 என்ற நேர் செட்கணக் கில் சீனதைபேவின் சியா சின் லீயை 34 நிமிடங்களில் வீழ்த்தினார். 2-வது சுற்றில் சிந்து, அமெரிக்காவின் பிவென் ஹெங்கை சந்திக்கிறார்.

ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 21-19, 20-22, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷியுவனை யும், பிரேனாய் 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங்கின் லாங் அங்குஸையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x