Published : 29 Jul 2014 04:54 PM
Last Updated : 29 Jul 2014 04:54 PM

காமன்வெல்த் ஹாக்கி: டிரினிடாட் அணியை 14 கோல்கள் அடித்து வென்ற இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஹாக்கிப் பிரிவில் டிரினிடாட்&டொபாகோ அணியை 14-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்று தோல்வி தழுவிய இந்திய மகளிர் அணி இன்று டிரினிடாட் அணியை ஊதித் தள்ளியது.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். பிறகு தீபிகா மற்றும் ராணி ஆகியோர் அடுத்தடுத்து 2 கோல்களை அடிக்க 12வது நிமிடத்தில் இந்தியா 3-0 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு ஜஸ்பிரீத் கவுர், ராணி, கேப்டன் ரீது ராணி, தீபிகா, அனுராதா, ஆகிய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் மழை பொழிய இடைவேளையின் போது இந்தியா 9-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.

இடைவேளைக்குப் பிறகும் டிரினிடாட் அணி மீது இந்திய வீராங்கனைகள் அனுதாபம் கொள்ளவில்லை மேலும் 5 கோல்களை அடித்தனர்.

இந்த வெற்றியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிவு ஏ-யில் 3வது இடம் வகிக்கிறது. புதன் கிழமையன்று தென் ஆப்பிரிக்கா அணியை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x