Published : 18 Nov 2016 10:11 AM
Last Updated : 18 Nov 2016 10:11 AM

கால் இறுதியில் பி.வி.சிந்து

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி யின் கால் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.

சீனாவின் புஸ்ஹொவ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 7-ம் நிலை வீராங்கனை யான சிந்து தனது 2-வது சுற்றில் 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பிவென் ஹெங்கை 8-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கால் இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியோவை சந்திக்கிறார் சிந்து.

ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 20-22, 21-19, 21-12 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் வெயி நானை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான பிரனோய் 17-21, 19-21 என்ற நேர் செட்டில் சீனாவின் குயோபினிடம் தோல்வி யடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x